தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஆதியாகமம் 12: 3

உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் வேறு எந்த பொல்லாத வல்லமைக்கும் இடம் கொடாதபடி நம் உள்ளம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளங்களில், எமோரியரின் கிரியைகளையும், அம்மோனிய கிரியைகளையும், மோவாபிய கிரியைகளையும், பாசானின் கிரியைகளையும், நம்முடைய உள்ளத்திலிருந்து இவ்விதமான பொல்லாத எண்ணங்களையும் அகற்ற வேண்டும் என்று தியானித்தோம்.  

ஆனால் நாம் அடுத்தபடியாக தியானிப்பது என்னவென்றால்  

எண்ணாகமம் 22:1-9    

பின்பு இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணி, எரிகோவின் கிட்ட இருக்கும் யோர்தானுக்கு இக்கரையிலே மோவாபின் சமனான வெளிகளில் பாளயமிறங்கினார்கள்.

இஸ்ரவேலர் எமோரியருக்குச் செய்த யாவையும் சிப்போரின் குமாரனாகிய பாலாக் கண்டான்.

ஜனங்கள் ஏராளமாயிருந்தபடியினால், மோவாப் மிகவும் பயந்து, இஸ்ரவேல் புத்திரரினிமித்தம் கலக்கமடைந்து,

மீதியானியரின் மூப்பரை நோக்கி: மாடு வெளியின் புல்லை மேய்கிறதுபோல, இப்பொழுது இந்தக் கூட்டம் நம்மைச் சுற்றியிருக்கிற யாவையும் மேய்ந்துபோடும் என்றான். அக்காலத்திலே சிப்போரின் குமாரனாகிய பாலாக் மோவாபியருக்கு ராஜாவாயிருந்தான்.

அவன் பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்துவரும்படி, தன் சந்ததியாருடைய தேசத்தில் நதியருகேயுள்ள பெத்தூருக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: எகிப்திலிருந்து ஒரு ஜனக்கூட்டம் வந்திருக்கிறது; அவர்கள் பூமியின் விசாலத்தை மூடி, எனக்கு எதிரே இறங்கியிருக்கிறார்கள்.

அவர்கள் என்னிலும் பலவான்கள்; ஆகிலும், நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்; ஆதலால், நீர் வந்து, எனக்காக அந்த ஜனத்தைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறிய அடித்து, அவர்களை இத்தேசத்திலிருந்து துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான்.

அப்படியே மோவாபின் மூப்பரும் மீதியானின் மூப்பரும் குறிசொல்லுதலுக்குரிய கூலியைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிலேயாமிடத்தில் போய், பாலாகின் வார்த்தைகளை அவனுக்குச் சொன்னார்கள்.

அவன் அவர்களை நோக்கி: இராத்திரிக்கு இங்கே தங்கியிருங்கள்; கர்த்தர் எனக்குச் சொல்லுகிறபடியே உங்களுக்கு உத்தரவு கொடுப்பேன் என்றான்; அப்படியே மோவாபின் பிரபுக்கள் பிலேயாமிடத்தில் தங்கினார்கள்.

தேவன் பிலேயாமிடத்தில் வந்து: உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர் யார் என்றார்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கையில் இஸ்ரவேல் சபை  எமோரியரை ஜெயமெடுத்து, பின்பு  பிரயாணம் பண்ணி, எரிகோவின் கிட்ட இருக்கும், யோர்தானுக்கு இக்கரையிலே மோவாபின் சமனான வெளியிலே பாளயமிறங்கினார்கள்.  அப்போது இஸ்ரவேலர் எமோரியருக்கு செய்த யாவையும் சிப்போரின் குமாரனாகிய பாலாக் கண்டான்.  அப்போது இஸ்ரவேல் ஏராளமாயிருந்த படியால் மோவாப் மிகவும் பயந்து கலக்கமடைந்து மீதியானியரின் மூப்பரை நோக்கி; மாடு வெளியின் புல்லை மேய்கிறது போல் இப்பொழுது இந்த கூட்டம் நம்மை சுற்றியிருக்கிற யாவையும் மேய்ந்து போடும் என்றான்.  அக்காலத்திலே சிப்போரின் குமாரனாகிய பாலாக் மோவாபியருக்கு ராஜாவாயிருந்தான்  

ஏனென்றால் இஸ்ரவேல் சபையை கண்டு மற்றவர்கள், பயப்படுகிறவர்களாயிருக்கிறார்கள் என்பதனை எதற்காக திருஷ்டாந்தபடுத்துகிறாரென்றால்  

1தெசலோனிக்கேயர் 4:14-18 

இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.

கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.

ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தம்முடைய  கோடான கோடி தூதன்மார்களாக தம்முடைய பரித்தவான்களாக நம் உள்ளத்தில்  எழுந்தருளும் போது அங்குள்ள புறஜாதிகளை அழித்து,  கர்த்தர் வெற்றிசிறப்பார்.  இவ்விதமாக கர்த்தர் நம் உள்ளத்தில் ஜெயக்கிறிஸ்துவாக எழுந்தருளுகிறார்.   இதனை அறிந்த பாலாக், இஸ்ரவேல் சபையின் ஆவிக்குரிய விடுதலையை தடைசெய்து அவன் வெற்றி எடுக்கலாம் என்று நினைக்க, பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்து வரும்படி  தன் சந்தநியாருடைய தேசத்திலே, நதியருகேயுள்ள பெத்தூருக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி இஸ்ரவேலரை குறித்து சொல்லி அனுப்புகிறான் என்பது கர்த்தர் கட்டுகிற திருஷ்டாந்தம் என்றால், 

அவர்கள் என்னிலும் பலவான்கள், ஆகிலும் நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன்  என்று அறிவேன்.  ஆதலால் நீர் வந்து எனக்காக அந்த ஜனத்தை சபிக்க வேண்டும்,  அப்போது ஒரு வேளை நான் அவர்களை முறியடித்து இத்தேசத்திலிருந்து துரத்திவிடக்கூடும் என்று சொல்ல சொன்னான்.  அப்படியே மோவாபின் மூப்பரும், மீதியாரின் மூப்பரும் குறிச்சொல்லுதற்குரிய  கூலியை பாலாக்கிடத்திலிருந்து வாங்கிக்கொண்டு  பிலேயாமிடத்தில் போய் பாலாக் கொடுத்த வார்த்தைகளை சொன்னார்கள்.  அப்போது பிலேயாம் இன்றைக்கு இந்த இராத்திரியிலே இங்கே தங்கியிருங்கள்; கர்த்தர் எனக்கு சொல்லுகிறபடி உத்தரவு கொடுப்பேன் என்றான்.  அப்படியே அவர்கள் அங்கு தங்கியிருந்தார்கள்.  ஆனால் தேவன் பிலேயாமிடத்தில் வந்து; உன்னிடத்தில் தங்கியிருக்கிற இந்த மனிதர் யார்? என்றார்.   

பிரியமானவர்களே கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் நம் உள்ளத்தில் இருக்கிற பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை கெடுக்கும்படியாக ஜாதிகள் தந்திரமாக கர்த்தருடைய ஊழியக்காரர்கள் மூலம் நுழைந்து உள்ளத்தில் கிரியை செய்ய பார்க்கும்.  அதனால் நாம் எப்பொழுதும் யாரிடத்திலும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். ஏனென்றால் பிலேயாமை வைத்து இஸ்ரவேலரை பாலாக் சபிக்க நினைக்கிறான்.  ஆனால் கர்த்தர் அதனை அறிந்து பிலேயாமை வஞ்சிக்க பாலாக் ஆள் அனுப்பிய போது அவர்களை பிலேயாம் தன்னிடத்தில் ஏற்றுக்கொண்டதினால், தேவன் அவனிடம் உன்னிடத்தில் வந்தது யார் என்று கேட்கிறார், அவனிடத்தில் வந்தது யார் என்று அறிந்த தேவன்  குறிசொல்லுகிறவர்களுக்கு இடம் கொடுத்ததால் அவ்விதம் கேட்கிறார்.  

பிரியமானவர்களை நாம் நம்முடைய உள்ளமாகிய தேவனுடைய வீட்டில் வேறு எந்த ஜாதிக வல்லமைக்கும் இடம் கொடுக்காதபடி எச்சரிப்பாக காத்துக்கொள்ள வேண்டும்.  இவ்விதம் நாம் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.