தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 136: 19

எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம், நம்முடைய உள்ளத்தில் எமோரியரின் கிரியைகள், பாசானின் கிரியைகளாகிய ஜாதிகளின் கிரியைகள் முழுமையும் அகற்றப்படவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் ஒருபோதும், சத்துருவின் பயத்தால் திடனற்று போகாதபடி இருக்க நம்முடைய உள்ளம் ஜாக்கிரதையாக பாதுகாக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று தியானித்தோம்.  

அடுத்ததாக நாம் தியானிக்க போவது என்னவென்றால் 

எண்ணாகமம் 21:25-27

இஸ்ரவேலர் அந்தப் பட்டணங்கள் யாவையும் பிடித்து, எஸ்போனிலும் அதைச் சார்ந்த எல்லாக் கிராமங்களிலும் எமோரியருடைய எல்லாப் பட்டணங்களிலும் குடியிருந்தார்கள்.

எஸ்போனானது எமோரியரின் ராஜாவாகிய சீகோனின் பட்டணமாயிருந்தது; அவன் மோவாபியரின் முந்தின ராஜாவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அர்னோன் வரைக்கும் இருந்த அவன் தேசத்தையெல்லாம் அவன் கையிலிருந்து பறித்துக்கொண்டான்.

அதினாலே கவிகட்டுகிறவர்கள்: எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் ஸ்திரமாய்க் கட்டப்படுவதாக.

மேற்க்கூறப்பட்ட கருத்துக்களை நாம் தியானிக்கும் போது, இஸ்ரவேலர் எமோரியரின் பட்டணங்களை பிடித்து, அங்கே குடியேறினபோது அதன் சுற்றிலும் அம்மோன் எல்கையாக  இருக்கிறான்.  இதன் காரணம் எதற்காக இதனை திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் நம் உள்ளத்தில் உள்ள செயல்கள் ஒன்று விட்டு ஒன்று மாறிக்கொண்டிருக்கிறதினால், அங்கு பல ஆவிக்குரிய யுத்தங்கள் வெளிப்படுகிறது. 

இதனை கர்த்தராகிய இயேசுவின் மேல் மாத்திரம் நாம் விசுவாசம் வைத்து, அவர் செய்த கிரியைகளை நாமும் செய்வோமானால் மட்டுமே அவர் சீயோனை நம்மளில் கட்டி தமது மகிமையில் வெளிப்படுவார். ஆனால் இஸ்ரவேலர், எஸ்போனிலும்,  அதனை சார்ந்த எல்லா பட்டணங்களிலும்,கிராமங்களிலும், குடியேறினார்கள்.  அது எமோரியரின் பட்டணமாகிய சீகோனுடையதாயிருந்தது.  இதனை சீகோன் மோவாபியரின் முந்தின ராஜாவுக்கு விரோதமாக அவன் கையிலிருந்து பறித்துக்கொண்டான்.   அதனால் அவன் சொல்வது கவிகட்டுகிறவர்கள்: எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் ஸ்திரமாய்க் கட்டப்படுவதாக என்கிறான்.  

இதன் விளக்கங்கள் என்னவென்றால் நம்முடைய உள்ளமானது எப்படி உலகத்தோடு ஒட்டி உல்லாசமாக வாழலாம் என்று அலை மோதியடித்துக்கொண்டிருக்கும்.  அதனால் நம்முடைய உள்ளம் பல விதத்தில் மற்றவர்களுடைய கிரியைகளை பார்த்து நாமும் செய்ய துணிவோம்.  அப்போது சீயோனை கட்டுவதற்கு பதிலாக சீகோனை எழுப்புவதற்கு நம்முடைய உள்ளம் தாறுமாறானவைகளை செய்ய துணிவோம்.  அவ்விதம் சீகோனை ஸ்திரபடுத்தும் படியாக 

எண்ணாகமம் 22:28  

எஸ்போனிலிருந்து அக்கினியும் சீகோனுடைய பட்டணத்திலிருந்து ஜுவாலையும் புறப்பட்டு, மோவாபுடைய ஆர் என்னும் ஊரையும், அர்னோனுடைய மேடுகளிலுள்ள ஆண்டவமார்களையும் பட்சித்தது.

மேறக்கூறிய வசனம் காணப்படுகிறது.    

அப்பொழுது இஸ்ரவேலர் பாடின பாட்டானது 

எண்ணாகமம் 21:29,30 

ஐயோ, மோவாபே, கேமோஷ் தேவனின் ஜனமே, நீ நாசமானாய்; தப்பி ஓடின தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குச் சிறைகளாக ஒப்புக்கொடுத்தான்.

அவர்களை எய்துபோட்டோம்; எஸ்போன் பட்டணம் தீபோன் ஊர்வரைக்கும் நாசமாயிற்று; மேதேபாவுக்குச் சமீபமான நோப்பா பட்டணபரியந்தம் அவர்களைப் பாழாக்கினோம் என்று பாடினார்கள்.

இவ்விதமாக எமோரியரின் பட்டணத்தில்  இஸ்ரவேலர்  குடியிருந்தார்கள். பின்பு யாசேர் பட்டணத்தில் வேவு பார்க்கிறவர்களை அனுப்பி, அவர்களையும், அவர்களை சேர்ந்த கிராமங்களையும் கட்டிக்கொண்டு,  அங்கேயிருந்த எமோரியரை துரத்தி விட்டார்கள்.  பின்பு  பாசானுக்கு போகிற வழியாய் திரும்பி வருகிற  போது பாசனின் ராஜாவாகிய ஓக், தன் சமஸ்த ஜனங்களோடும்  யுத்தம் பண்ணும்படி இஸ்ரவேல் சபைக்கு எதிரே புறப்பட்டு வந்தான்.  

இதிலிருந்து நமக்கு தெரிய வருகிறது என்னவென்றால், எமோரியரின் தேசம் ஜாதிகளின் தேசம்.  பாசான் தேசத்து பலத்த எருதுகள் என்று எழுதப்பட்டிருப்பது, அவர்கள் அக்கிரமம் செய்து கர்த்தருக்கு விரோதமாக உயர்ந்திருக்கிறது.  அதனைக் குறித்து 

சங்கீதம் 68:13-17  

நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள்போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள்.

சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையாயிற்று.

தேவபர்வதம் பாசான் பர்வதம் போலிருக்கிறது; பாசான் பர்வதம் உயர்ந்த சிகரங்களுள்ளது.

உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்தப் பர்வதத்தில் வாசமாயிருக்க தேவன் விரும்பினார்; ஆம், கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார்.

தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது; ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்தவண்ணமாய் அவைகளுக்குள் இருக்கிறார்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கையில்,  இந்நாள் வரையில் நாம் எப்படிப்பட்ட அக்கிரம சிந்தைகள் கொண்டிருந்தாலும் கர்த்தர் சத்துருக்களை சிதறடித்து, நம்மை பரிசுத்தப்படுத்தி நம்மை சல்மோன் மலையில் உறைந்த மழையைப்போல் வெண்மையாக்குகிறார்.   இவ்விதமாக பாசானின் பலத்த எருதாக இருந்தவர்களை கர்த்தர் இரட்சித்து பரிசுத்தப்படுத்துகிறார்.  இவ்விதமாக கர்த்தர் நம்மை பல சத்துருக்களின் கையிலிருந்து விடுவித்து இரட்சிக்கிறார். ஆதலால் கர்த்தர் மோசேயிடம்  

எண்ணாகமம் 21:34,35  

கர்த்தர் மோசேயை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவன் ஜனங்கள் எல்லாரையும், அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே வாசமாயிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தபடியே இவனுக்கும் செய்வாய் என்றார்.

அப்படியே ஒருவரும் உயிருடன் மீதியாயிராதபடிக்கு அவனையும், அவன் குமாரரையும், அவனுடைய சகல ஜனங்களையும் வெட்டிப்போட்டு, அவன் தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்.

மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம்  பாசான் ராஜாவாகிய ஓகுக்கு பயப்படவேணடாம், எமோரியின் ராஜவாகிய சீகோனுக்கு செய்தபடியே இவனுக்கும் செய்.  அந்தபடியே ஒருவரையும் மீதியாக உயிருடன் வைக்காமல் அவனையும், அவன் குமாரரையும், அவனுடைய சகல ஜனங்களையும் வெட்டிப்போட்டு அவன் தேசத்தை கட்டிக்கொண்டான்.  

இதனையெல்லாம் தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறது என்னவென்றால், நாம் நம்முடைய  உள்ளான மனுஷன் மிகவும் பரிசுத்தப்படும்படியாகவே கர்த்தர் இவ்வித காரியங்களை செய்து திருஷ்டாந்தப்படுத்தகிறார். 

பிரியமானவர்களே நம்முடைய உள்ளான எண்ணங்களில்  வருகிற பொல்லாதவைகளை மாற்றி கர்த்தருடைய வசனத்தால் நம் ஆத்துமாவை காத்துக்கொள்ளவேண்டும்.  இவ்விதமாக ஜாதிகளின் கிரியைகளை அழித்து நம் உள்ளத்தை பாதுகாத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.