தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 14: 32

இப்போதும் இந்த ஜாதியின் ஸ்தானாபதிகளுக்கு என்ன மாறுத்தரவு சொல்லப்படும்? கர்த்தர் சீயோனை அஸ்திபாரப்படுத்தினார்; அவருடைய ஜனத்தில் சிறுமையானவர்கள் அதிலே திடன்கொண்டு தங்குவார்கள் என்பதே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் விசுவாச யாத்திரையில் திடனற்று போகாதபடி நம்முடைய உள்ளத்தை  ஜாக்கிரதையாக காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்திலிருந்து பரிசுத்த வார்த்தைகள் வெளிப்படவேண்டும் என்றும், அவ்விதம்  வெளிப்படுவதற்கு, திருஷ்டாந்தமாக கர்த்தர்  இஸ்ரவேல் சபையை பல இடங்களில் புடமிடுகிறார் என்பதனை நாம் வாசிக்க முடிகிறது.  எப்படியெனில் அவர்கள் விரும்புகிற பிரகாரம் அப்பமும், தண்ணீரும், கிடைக்காததும், அதனால் அவர்கள் முறுமுறுப்பதும், அப்போது கர்த்தர் அவர்களை சிட்சிப்பதும், இவ்விதமாக இஸ்ரவேல் சபையை சீர்படுத்தி, திடப்படுத்தும்படியாவும், கர்த்தரே தேவன் என்று அவர்கள் முழு மனதோடும், முழு இருதயத்தோடும், முழு உள்ளத்தோடும் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் கர்த்தர் அவர்கள் நடுவில் சில செயல்களை செய்கிறதை பார்க்கிறோம். 

மேலும் கானானியனையும் அழிக்கும்படியாக கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் வழியாக நடத்தி வந்தார்.  இவையெல்லாம் நம்முடைய உள்ளம் பரிசுத்தபடும் போது உள்ளத்திலிருந்து நல்ல சுத்தமான ஊற்று புறப்படும் படியாகவே கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  அதனால் தான் 

யோவான் 7:37, 38 

பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.

வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

வசனங்களில் உள்ளத்திலிருந்து ஜீவ தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்று எழுதப்பட்டிருக்கிறது. 

அடுத்ததாக நாம் தியானிக்கிற கருத்துகள் 

எண்ணாகமம் 20:19-25 

அந்த வனாந்தரத்திலிருந்து மாத்தனாவுக்கும், மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்துக்கும்,

பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.

அப்பொழுது இஸ்ரவேலர் எமோரியரின் ராஜாவாகிய சீகோனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:

உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; நாங்கள் வயல்களிலும், திராட்சத்தோட்டங்களிலும் போகாமலும், துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும், உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும் ராஜபாதையில் நடந்துபோவோம் என்று சொல்லச்சொன்னார்கள்.

சீகோன் தன் எல்லைவழியாய்க் கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்தரவு கொடாமல், தன் ஜனங்களெல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலருக்கு விரோதமாக வனாந்தரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான்.

இஸ்ரவேலர் அவனைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அர்னோன் தொடங்கி அம்மோன் புத்திரரின் தேசத்தைச்சார்ந்த யாப்போக்குவரைக்குமுள்ள அவனுடைய தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்; அம்மோன் புத்திரரின் எல்லை அரணிப்பானதாயிருந்தது.

இஸ்ரவேலர் அந்தப் பட்டணங்கள் யாவையும் பிடித்து, எஸ்போனிலும் அதைச் சார்ந்த எல்லாக் கிராமங்களிலும் எமோரியருடைய எல்லாப் பட்டணங்களிலும் குடியிருந்தார்க

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது  இஸ்ரவேல் சபை பேயோரில் கூடி ஊற்றுகளை தோண்டின பிறகு வனாந்தரத்திலுள்ள மாத்தானுக்கும், மாத்தானிலிருந்து நாகோலியேலுக்கும், நாகலியேலிருந்து பாமோத்துக்கும், பள்ளதாக்கிலுள்ள மோவாபின் வெளியிலுள்ள பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.   ஆனால் பிஸ்காவின் உச்சியிலிருந்து இஸ்ரவேலர் எமோரியரின் ராஜாவாகிய சீகோனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி அந்த தேசத்தின் வழியாய் கடந்து போகும்படி உத்தரவு கொடுக்க வேண்டும் என்று கேட்கும் போது, நாங்கள் வயல்களிலும், திராட்ச தோட்டங்களிலும் போகாமலும்,  துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும், உமது எல்லையை கடந்து போகும்மட்டும் ராஜபாதையில் நடந்து போவோம் என்று சொல்ல சொன்னார்கள்.    

இந்த வார்த்தைகளை கேட்டவுடனே அவன் தன் ஜனங்களெல்லாரையும்  கூட்டிக்கொண்டு யாகாசுக்கு வந்து யுத்தம் பண்ணினான்.  இஸ்ரவேலர் அவனை பட்டயகருக்கினால் வெட்டி, அர்னோன் தொடங்கி, அம்மோன் புத்திரரின் தேசத்தை சார்ந்த யாப்போக்கு வரைக்குமுள்ள அவனுடைய தேசத்தை கட்டிக்கொண்டார்கள்.  ஆனால் அங்கு அம்மோன் புத்திரரின் எல்லை அரணிப்பாயிருந்தது.  இஸ்ரவேலர் எல்லா பட்டணங்களையும் பிடித்து எஸ்போனிலும், அதனை சார்ந்த எல்லா கிராமங்களிலும், எமோரியருடைய எல்லா பட்டணங்களிலும் குடியிருந்தார்கள்.   இவ்விதமாக எமோரியரின் பட்டணங்களை பிடித்தார்கள்.  ஆனால் அம்மோனியன் எல்லையாகியிருக்கிறான்.  

பிரியமானவர்களே நம்முடைய உள்ள செயல்கள் ஒன்றை விட்டு ஒன்று மாறி வருவதினால் இஸ்ரவேலர் திடனற்று போனார்கள்.  ஆதலால் பிரியமானவர்களே நாம் திடனற்று போகாதபடி இருக்க  நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் இருக்கிற இவ்வுலகத்தின் அதிபதிகளாகிய இராட்சத கிரியைகளை அழித்து, நமக்கு அவருடைய ஜீவன் தந்து ஆத்துமாவை உயிர்பித்து கிறிஸ்து எழுந்தருளுகிறவராக வெளிப்படுகிறார்.   

ஆதலால் பிரியமானவர்களே இவ்விதமாக கர்த்தர் நம்மை சகல இராட்சத கிரியைகளிலிருந்து விடுவித்து இரட்சிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை