தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 12: 3

நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்திலிருந்து பரிசுத்த வார்த்தைகள் வெளிப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு விரோதமாக பாவஞ்செய்தால் கர்த்தர் நம்மை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிறவர் என்பதனை குறித்து தியானித்தோம்.  

ஆனால் இந்த நாளில் நாம் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 21:10-18  

இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்பட்டுப்போய், ஓபோத்தில் பாளயமிறங்கினார்கள்.

ஓபோத்திலிருந்து பிரயாணம்பண்ணி, சூரியோதயத்திற்கு நேராய் மோவாபுக்கு எதிரான வனாந்தரத்திலுள்ள அபாரீமின் மேடுகளில் பாளயமிறங்கினார்கள்.

அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப் போய், சாரேத் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள்.

அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப் போய், எமோரியரின் எல்லையிலிருந்து வருகிறதும் வனாந்தரத்தில் ஓடுகிறதுமான அர்னோன் ஆற்றுக்கு இப்புறம் பாளயமிறங்கினார்கள்; அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியருக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை.

அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும்,

ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; ஜனங்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்.

அப்பொழுது இஸ்ரவேலர் பாடின பாட்டாவது: ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள்.

நியாயப்பிரமாணிக்கனின் ஏவுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; ஜனத்தில் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள் என்று பாடினார்கள்.

கர்த்தர் இஸ்ரவேல் சபையை தமது கோபத்தினால், விக்கிரகங்களுக்கு அடிமைப்படுத்தின பின்பு, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்பட்டு ஓபோத்திலே பாளயமிறங்கினார்கள்.  அதன் பின்பு புறப்பட்டு சூரியோதயத்திற்கு நேராய் மோவாபுக்கு எதிரான வனாந்தரத்திலுள்ள அபாரீமின் மேடுகளில்  பாளயமிறங்கினார்கள். பின்பு அங்கேயிருந்து புறப்பட்டு சாரேத் பள்ளதாக்கிலே பாளயமிறங்கினார்கள். அங்கேயிருந்து பிரயாணப்பட்டு போய் எமோரியரின் எல்லையிலிருந்து வருகிறதும், வனாந்தரத்தில் ஓடுகிறதுமான அர்னோன் ஆற்றுக்கு இப்புறம் பாளயமிறங்கினார்கள்.  அந்த அர்னோன்  மோவாபியருக்கும் எமோரியருக்கும்  நடுவே இருக்கும் மோவாபின் எல்லை.  

மேற்க்கூறிய கருத்துகளை கர்த்தர் கூறுகிற காரியங்கள் என்னவெனில்,  இஸ்ரவேல் புத்திரர் விசுவாச ஓட்டம் என்ன என்று தெரியாமல், கர்த்தருக்கு விரோதமாக பாவஞ்செய்து, கர்த்தரால் தண்டிக்கப்பட்டு வரும் போது, அவர்கள் உள்ளம் மேட்டிமைக்கொண்டிருக்கிறதினால், அதனை குறித்து கர்த்தர் அவர்கள் மேடுகளில் பாளயமிறங்கினார்கள் என்றும், பின்பு, கர்த்தருடைய வார்த்தைகளை கேட்டு, தன்னை தாழ்த்தி ஒப்புக்கொடுத்ததை கர்த்தர் பள்ளத்தாக்குகளில் பாளயமிறங்கினார்கள் என்றும், மேலும் எமோரியர், மோவாபியர் கிரியைகளை அழிக்காததால் அர்னோன் ஆற்றுக்கு இப்புறம் பாளயமிறங்கினார்கள் என்றும் எழுதப்பட்டிருக்கிறது.  அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோன் ஆற்றுக்கால்களும், ஆர் என்னும் நிலத்திற்கு பாயும் நீரோடையும், மோவாபின் எல்லையை சார்ந்திருக்கிறது என்றும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதி இருக்கிறது.  

பிரியமானவர்களே இதனை வாசிக்கும்போது யுத்த புஸ்தகம் இருக்கிறது என்பதும் கர்த்தர் நமக்காக யுத்தம் செய்கிறவர் என்பதும், அதற்கான திருஷ்டாந்தத்தோடு கர்த்தர் விளக்குகிறார் என்பதும், நம்முடைய இருதயம் யுத்த களமாகவும், யுத்த வீரர் கிறிஸ்து  என்பதும், நம் உள்ளத்தில் ஓடுகிற ஆறானது எமோரியரின் கிரியகளும், மோவாபியரின் கிரியகளும், மற்றும் பல ஜாதிகளின் செயல்பாடுகளை கர்த்தர் அழித்து ஜெயித்தவராக எழுந்தருளுவார் என்பதனை  கர்த்தர் குறிப்பிட்டு இஸ்ரவேல் புத்திரரை  வேறு திசைகளிலிருந்து வரவழைத்து எல்லோரையும் பேயோருக்கு கூடி வர செய்து அங்கு தண்ணீர் கொடுப்பேன் என்றார். 

அந்த இடம் தான் கர்த்தர் மோசேயிடம் தண்ணீர் இருக்கிற இடம் என்று சொல்லியிருந்தார்.  அதனால் எல்லாரும் அங்கு வந்த உடன் ஊற்று தண்ணீரே பொங்கி வா; அதை குறித்து பாடுவோம் என்றார்கள்.  அப்போது நியாயபிரமாணிக்கனின் ஏவுதலால் அதிபதிகள் கிணற்றை தோண்டினார்கள்;  ஜனத்தின் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டுத் தோண்டினார்கள் என்று பாடினர்கள்.   

பிரியமானவர்களே ஊற்றில் பல வித ஊற்றுகள் உண்டு.  அது ஜீவ தண்ணீராகிய  திரு வசனமாகிய துரவுக்கு திருஷ்டாந்தம்.  உண்மையும், மாயம் இல்லாத ஊற்று தான் கிறிஸ்துவின் ஊற்று.  அதனை நாம் ஒவ்வொருவரும் கண்டறியவேண்டும்.  இதனை குறித்து  கர்த்தருடைய வார்த்தை 

நீதிமொழிகள் 5:15-19 

உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு.

உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.

அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக.

உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.

அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது ஊற்று கிறிஸ்துவும், ஊற்றுக்கண் பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியையும் காட்டுகிறது. அதற்கு திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார் பேயோரில் இருக்கிற ஊற்றைக்குறித்து .  ஆனால் நியாதிபதிகளின் ஏவுதலால் கிணற்றை தோண்டினதையும், ஆனால் அங்குள்ள மேன்மக்கள் அவர்கள் தண்டாயுதத்தை வைத்து தோண்டினார்கள்  என்று பாடினதைப் பார்க்கிறோம். 

அதனால் பிரியமானவர்களே நாம் தோண்டுகிற ஊற்றானது பரிசுத்தப்படுத்தின நம்முடைய ஆத்துமாவிலிருந்து ஊற்றுக்கண் திறந்து அவருடைய வசனங்கள் வெளிப்பட வேண்டும். இவ்விதம் நாம் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும்படி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.