தேவனுக்கே மகிமையுண்டாவதாக

செப்பனியா 3:12  

உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு விரோதமாக பாவஞ்செய்தால், அவர் நம்மை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிறவர்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் மிக பரிசுத்தமாக  இருந்து, பரிசுத்தத்தோடு கர்த்தருக்கு ஆராதனை செலுத்த வேண்டும் என்று தியானித்தோம்.  அதெப்படி எள்றால் இஸ்ரவேல் சபையை சுத்திகரிப்பை திருஷ்டாந்தப்படுத்தி, கர்த்தர் நம்முடைய  உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துவது எப்படி என்பதனை விளக்கி காட்டும்படியாகவே சிவந்த சமுத்திரத்தின் வழியாக கானானுக்குள் வரத்தக்கதாக கர்த்தர் முகாந்தரங்களை உண்டாக்கி இஸ்ரவேல் சபையை வைத்து கர்த்தர் கானானியனை சங்கரிக்கிறார் என்பது, நாம் நம்முடைய உள்ளம் எந்த அந்நியனுக்கும் இடம் கொடுக்கக்கூடாது என்பதனை தெளிவுபடுத்துகிறதை வாசிக்க முடிகிறது.  

பிரியமானவர்களே  அடுத்தப்படியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 21:5- 9

ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள்.

அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய் ச்சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள்.

அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணினான்.

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.

அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.

மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம் சபை சிவந்த சமுத்திரத்தை கடக்கும் போது ஜனங்கள் மனமடிவாகிவிட்டார்கள்.  அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்கும், மோசேக்கும், விரோதமாக பேசி நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி,  நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து  வரபண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள். 

பிரியமானவர்களே இவ்விதமாக கர்த்தர் நம்மை எப்படி காத்து வழிநடத்தினாலும், நாமும் கர்த்தரை அற்பமாக எண்ணாமல் இருக்க வேண்டும்.  இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை அற்பமாக எண்ணினதால் கர்த்தர் அவர்களுக்குள்ளே கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பினார்.  அவைகள் ஜனங்களை கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள்.    அப்போது ஜனங்கள் மோசேயினிடத்தில் போய், நாங்கள் கர்த்தருக்கு விரோதமாக பேசினதினால் பாவஞ் செய்தோம்; சர்ப்பங்கள் எங்களை கடிக்காதபடிக்கு எங்களுக்காக விண்ணப்பம் பண்ணும்படி கேட்க, மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணுகிறான்

அப்பொழுது கர்த்தர் மோசயிடம் சொல்கிறது என்னவென்றால் நீ ஒரு கொள்ளிவாய்  சர்ப்பத்தின் உருவத்தை செய்து அதை ஒரு கம்பத்தின் மேல் தூக்கி வை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கி பார்த்தால் பிழைப்பான் என்றார்.  அப்படியே மோசே ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டாக்கி கர்த்தர் சொன்னது போல் செய்தான்.   சர்ப்பம் ஒருவனை கடித்தப்போது அவன் அந்த வெண்கல சர்ப்பத்தை நோக்கிப்பார்த்து பிழைப்பான்.  

பிரியமானவர்களே இந்த வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது நாம் சிந்திக்கலாம்  கர்த்தர் மோசேயிடம்  வெண்கல சர்ப்பம் செய்ய சொன்னது நன்மைக்கென்று என்று நாம் நினைக்கலாம்.  ஆனால் கர்ததரின் செயல்களை குறித்து நாம் சீக்கிரத்தில் எளிதாக அறிந்துக் கொள்ள முடியாது.  அவற்றை ஆழத்தில் அறிய வேண்டுமானால், அவரோடு ஐக்கியப்பட்டு, அவர் விரும்புகிற பரிசுத்தம் அடைந்தால் மட்டுமே அறிந்துக்கொள்ள முடியும்.  என்னவென்றால் பரிசுத்தம் பெறுவதற்கு நம்முடைய மன கண்கள் பிரகாசிக்க வேண்டும்.மன கண்கள் பிரகாசித்தால் மட்டுமே நாம் ஒவ்வொன்றாக சத்தியத்தை அறிந்துக்கொள்ள முடியும். 

ஆதலால் பிரியமானவர்களே சத்தியம் நம்மை பாவம், சாபம், அக்கிரமம் இவையெல்லாவற்றிலிருந்து விடுதலையாக்கும்.  என்னவெனில் கர்த்தருடைய கட்டளை விக்கிரகராதனை செய்யக்கூடாது என்று எழுதப்பட்டிருக்கிறது.  ஆனால் கர்த்தர் வெண்கல சர்ப்பம் செய்து கம்பத்தின் மேல் தூக்கி வைத்தால்,சர்ப்பம் கடித்தவர்கள்,  அதனை நோக்கி பார்த்தால் பிழைப்பார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  

இவ்விதம் கர்த்தர் செய்தால் இதன் காரணம் என்ன என்று அறிந்துக்கொள்ள வேண்டுமானால் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கு விரோதமாக பாவஞ்செய்தால் கர்த்தர் கோபமூண்டவராகி, எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்ததென்ன என்று சொன்னதினால் அவர்கள் உள்ளம் வஞ்சிக்கப்படும்படி அவர்களை சத்துருவின் கையில் அடிமைப்படுத்தும்படியாக கம்பத்தின் மேல் சர்ப்பத்தை உண்டாக்க வைத்து, அதனை பார்க்கசொல்லி பிழைக்கசெய்து, இவ்விதம் அற்புதம் செய்து காட்டுகிறார்.   

ஆனால் ஜனங்களுடைய கண் திறவாத காரணத்தால் அவர்கள் அதனை பாரத்து பிழைத்தார்கள்.  ஏனெனில் அவர்கள் கர்த்தருடைய கட்டளையை மீறும் படி செய்கிறார்.  இவ்விதம் அவர்கள் பல காரணங்களால் கானானில் பிரவேசிக்க கூடாமற் போனார்கள்.  இவ்விதமாக இஸ்ரவேல் சபை நியாயந்தீர்க்கப்பட்டது.  அதைத்தான்  

2 தெசலோனிக்கேயர் 2:10-12  

கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.

ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,

அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம், கர்த்தருக்கு விரோதமாக பாவஞ்செய்தால் கர்த்தர் நம்மை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிறவராக காணப்படுகிறார்.  இவ்விதமாக நாம் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கபடாதபடி ஜாக்கிரதையாக காணப்படுவோம்.  ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.