தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஓசியா 6: 1, 2

கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.

இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய  நாம் உலகம், மாம்சம், பிசாசு இவற்றை ஜெயித்து, உள்ளத்தில் கிறிஸ்துவின் சரீரமாகிய சபை எழும்ப வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கானானுக்குள் பிரவேசிக்கும் படியாக நம்முடைய உள்ளத்தை சத்துரு வஞ்சிக்காதபடி காத்துக்கொள்ள வேண்டும் என்றும், ஆனால் இஸ்ரவேல் புத்திரர் கானான் யாத்திரையில் அநேகம் பேர் வழியில் மாண்டு அழிந்ததை நாம் தியானித்தோம். எப்படியெனில் வழியில் தண்ணீர் கிடைக்காததினால் அவர்கள் மோசே, ஆரோன் என்பவர்களிடம் வாக்குவாதம் பண்ணினார்கள். ஆனால் வாக்குவாதம் பண்ணின இடத்திற்கு மேரிபா என்று பெயரிடப்பட்டது.  ஆகையால் தேவன் அங்கு நியாயதீர்ப்பை செய்கிறார்.  

என்னவெனில் ஒருவருடைய உள்ளம் கர்த்தரால் பரிசுத்தப்படுத்தப்பட்ட பிறகு அந்த உள்ளம் துர் கிரியைகளாகிய வாக்குவாதம் எழும்பக்கூடாது.   இவ்விதம் உள்ளம் இருமனசு உண்டாயிருப்பதினால் கர்த்தர் பிரியமாயிருப்பதில்லை.  ஆதலால் 

யாக்கோபு 1:8     

இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது நாம் நிலைதவறி போகாதபடி ஒரே மனதோடுக்கூட கர்த்தரிடத்தில் ஐக்கியப்பட வேண்டும்.  

அடுத்தப்படியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 20: 14  

பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

மேற்கூறிய வசனங்களை தியனிக்கும் போது, இஸ்ரவேல் சபை காதேஸில் தங்கியிருந்த போது தான் அங்குள்ள தண்ணீர் மேரிபாவின் தண்ணீர் என்று சொல்கிறார்  ஆனால் பின்பு அவர்கள் அங்கிருந்து புறப்படும்படி மோசே காதேஸிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி 

எண்ணாகமம் 20:15-17  

எங்கள் பிதாக்கள் எகிப்துக்குப் போனதும், நாங்கள் எகிப்திலே நெடுநாள் வாசம்பண்ணினதும், எகிப்தியர் எங்களையும் எங்கள் பிதாக்களையும் உபத்திரவப்படுத்தினதும், இவைகளினால் எங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தமும் உமக்குத் தெரிந்திருக்கிறது.

கர்த்தரை நோக்கி நாங்கள் மன்றாடினோம்; அவர் எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; இப்பொழுது நாங்கள் உமது எல்லைக்கு உட்பட்ட காதேஸ் ஊரில் வந்திருக்கிறோம்.

நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; வயல்வெளிகள் வழியாகவும், திராட்சத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும், ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும், வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்போம் என்று, உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான் என்று சொல்லச் சொன்னான்.

மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம் சொல்லி அனுப்பின ஸ்தானாபதிகளிடம், ஏதோம் ராஜா சொல்கிறது 

எண்ணாகமம் 20:18-20 

அதற்கு ஏதோம்: நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்துபோகக்கூடாது; போனால் பட்டயத்தோடே உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான்.

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனை நோக்கி: நடப்பான பாதையின் வழியாய்ப் போவோம்; நாங்களும் எங்கள் மிருகங்களும் உன் தண்ணீரைக் குடித்தால் அதற்குக் கிரயங்கொடுப்போம்; வேறொன்றும் செய்யாமல், கால்நடையாய் மாத்திரம் கடந்துபோவோம் என்றார்கள்.

அதற்கு அவன்: நீ கடந்துபோகக்கூடாது என்று சொல்லி, வெகு ஜனங்களோடும் பலத்த கையோடும் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டான்.

மேற்க்கூறிய வார்த்தைகள் பிரகாரம் ஏதோம் சொல்லி அனுப்புகிறான். இவ்விதமாக நடப்பதின் கருத்து என்னவென்றால் இஸ்ரவேல் சபை, ஆவிக்குரிய பிறப்பை தேவன் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி, ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டவர்கள் ஒருபோதும் மாம்ச கிரியைகள் நடப்பிக்கக்கூடாது என்பதற்காக கர்த்தர் ஏதோமை வைத்து தெளிவுப்படுத்துகிறார்.   அதிலும் மோசே ஏதோமிடத்தில் அவ்வழியாய் போகும்படி அனுமதி மட்டும்தான் கேட்க ஸ்தானாபதிகளை அனுப்புகிறான்.  ஆனால் ஏதோமோ இவற்றை கேட்ட மாத்திரத்தில் வெகு ஜனங்களோடும் பலத்த கையோடும் அவர்களை எதிர்க்க புறப்பட்டான்.  

பிரியமானவர்களே இதனை நாம் தியானிக்கும் போது மாம்சம், ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் எப்போதும் போராடும் என்பதனை காட்டுகிறது. இவைத்தான் ஆபிராகாமுடைய வீட்டிற்க்குள்ளும் நடந்தது.  எப்படியெனில் எகிப்திலிருந்து கானானுக்கு மூன்று நாள் பிரயாணதூரம் மட்டும் தான் உண்டு.  ஆனால் கர்த்தர் அவர்களை நடத்துவது நாற்பது வருடம்.  காரணம் என்னவென்றால் நம் ஒவ்வொருவரும் மாம்ச செயல்கள் அழிக்கப்பட்டு ஆவிக்குரிய சிந்தைகள் திடமாகப்பெற்று இவ்வுலகத்தை ஜெயிக்கிறவர்களாக காணப்படவேண்டும். 

அதனை தான் கர்த்தாகிய இயேசு கிறிஸ்து இவ்வுலத்தை மூன்றாம் நாளில் ஜெயித்தெழுந்தார். இவ்விதமாக மூன்றாம் நாள் கர்ததரை உண்மையாக பின்பற்றினால் நாற்பது வருடம் நடந்து வந்த இஸ்ரவேல் சபையை, நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் மூன்றாம் நாளில் எழுப்புகிறார். இந்த நாற்பது வருடத்தை கர்த்தர் நாற்பது நாளாக மாற்றி சோதனையை ஜெயித்து, மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல,தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிற படி வார்த்தையாகிய கிறிஸ்து மகிமையாக நம் உள்ளத்தில் எழுந்தருளுகிறார். 

அவற்றைக்குறித்து மத்தேயு 4:1-4  

அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.

அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

மேற்கூறிய வசனங்களின் கருத்துக்கள்த்தான் இஸ்ரவேல் சபை நம்முடைய உள்ளத்தில் எழும்புகிறது.  அதுதான் இஸ்ரவேல் சபை.  இவ்விதமாக நாம் யாவரும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையாக ஆசீர்வதிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.