தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 45:13

ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம், கானானுக்குள் பிரவேசிக்கும் படியாக நம்முடைய உள்ளத்தை சத்துரு வஞ்சிக்காதபடி காத்துக்கொள்ளவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டு போகாதபடி இருக்க நம்முடைய உள்ளான மனுஷன் தீட்டுபடாதபடி நம்மை ஜாக்கிரதையாக காத்துக்கொள்ள வேண்டும்.  அவ்விதம் காத்துக்கொண்டால் மட்டுமே கர்த்தரின் வாசஸ்தலம் பரிசுத்தமாயிருக்கும் என்று தியானித்தோம்.  மேலும், 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 20:1-13   

இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்தரத்திலே சேர்ந்து, ஜனங்கள் காதேசிலே தங்கியிருக்கையில், மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்பட்டாள்.

ஜனங்களுக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடினார்கள்.

ஜனங்கள் மோசேயோடே வாக்குவாதம்பண்ணி: எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும்.

நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கே சாகும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்தரத்திலே கொண்டுவந்தது என்ன;

விதைப்பும், அத்திமரமும், திராட்சச்செடியும், மாதளஞ்செடியும், குடிக்கத் தண்ணீரும் இல்லாத இந்த கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன என்றார்கள்.

அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரைவிட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.

கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்.

அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான்.

மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி,

தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது.

பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.

இங்கே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம்பண்ணினதினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது.

மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம் நாம் தியானிக்கும் போது இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன் வனாந்திரத்திலே சேர்ந்து ஜனங்கள் காதேசிலே தங்கியிருக்கும் போது, மிரியாம் மரணமடைந்து , காதேசிலே அடக்கம்பண்ணப்படுகிறாள்.  ஆனால் அங்கு ஜனங்களுக்கு தண்ணீர்  இல்லாததினால், அவர்கள் மோசேக்கும், ஆரோனுக்கும்  விரோதமாக கூட்டங்கூடினார்கள். 

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாக பாவஞ்செய்ததின் காரணமாக அநேகர் யாத்திரையில் மாண்டு போகிறார்கள்.  அவ்விதம் தாங்கள் செய்த தவறுகளினால் மாண்டு போனதால், இஸ்ரவேல் புத்திரர் மோசேயிடம், தண்ணீர் கிடைக்காததினால் நாங்களும், எங்கள் சகோதரர் போல் மாண்டு போயிருந்தால் நலமாயிருக்கும் என்றார்கள்.  மற்றும் அவர்கள் நாங்களும், எங்கள் மிருகங்களும் இங்கே சாகும் படி, கர்த்தரின் சபையை இந்த வனாந்தரத்திலே கொண்டு வந்தது என்ன? என்றார்கள்.  

பிரியமானவர்களே,  இதனை திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் நாம் இரட்சிக்கபடாவிட்டால், நம்முடைய ஆத்துமா மிருகத்தின் சுபாவம், அப்படிபட்டவர்கள் மேல் ஜீவ தண்ணீராகிய  வசனத்தால் நிறைந்த அபிஷேகம் கிடைக்காது.  எப்படியெனில் கழிந்த நாளில் தியானித்தது போல் நம்முடைய பாவங்களுக்காக நாம் பாவபரிகாரம் செய்யவேண்டும். அப்போது தான் ஜீவ தண்ணீராகிய அபிஷேகத்தால் நாம் நிரம்புவோம்.  அப்படி நாம் பாவபரிகாரம் செய்யாவிட்டால், நம்மளில் எந்த பிரயோஜனமும் கிடையாது.  அவர்களைக்குறித்து தான், விதைப்பும், அத்திமரமும், திராட்சசெடியும், மாதளஞ்செடியும், குடிக்க  தண்ணீரும் இல்லாத கெட்ட இடத்தில் எங்களை கொண்டு வரும்படி எங்களை எகிப்திலிருந்து புறப்படபண்ணினது என்ன என்று இஸ்ரவேல் புத்திரர் முறுமுறுக்கிறது, நம்மிடத்தில் இரட்சிப்பு  இல்லாமல் இருந்தால் நம்முடைய உள்ளமாகிய நிலம் மேற்க்கூறியது போல் வனாந்திரமாக காணப்படும்.  

அவ்விதம் முறுமுறுத்தவர்களுக்காக மோசேயும் ஆரோனும் சபையாரை விட்டு ஆசரிப்புக்கூடார வாசலிடத்திற்கு போய் முகங்குப்புற விழுந்தார்கள்.  அப்பொழுது கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது. அந்த மகிமை தான் கிறிஸ்து.  இதென்னவென்றால் இஸ்ரவேல் புத்திரர் நடுவில் கிறிஸ்து விளங்குகிறார் என்பது தெரிய வருகிறது.  

அல்லாமலும் கர்த்தருடைய சமூகத்தில் வைக்கப்பட்ட ஆரோனின் கோல் துளிர்த்ததாயிருந்தது. அதனை குறித்து சில நாட்களுக்கு முன் நாம் தியானித்தோம், அது தேவனுடைய வார்த்தையாகிய மகிமையாகிய கோல்.  இந்த கோலை கர்த்தர் மோசேயினுடைய கையில் கொடுக்கிறார்.  அதனைக்குறித்து கர்த்தர் மோசேயிடம் நீ கோலை எடுத்துக்கொண்டு நீயும் ஆரோனும் சபையாரை கூடி வரசெய்து, அவர்கள் கண்களுக்கு முன்பாக கன்மலையை பார்த்து பேசுங்கள்; அப்போது அது தன்னிலுள்ள தண்ணீரைக்கொடுக்கும்.  இப்படி நீ அவர்களுக்கு கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்பட பண்ணி, சபையாருக்கும், அவர்கள் மிருகங்களுக்கும் தண்ணீர் கொடுப்பாய் என்றார். 

அப்படியே மோசே கர்த்தரின் சந்நிதியிலிருந்து கோலை எடுத்து, மோசேயும் ஆரோனும் சபையாரை கூடிவரசெய்து, சபையாரை நோக்கி; கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்த கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணுவோமா என்று சொல்லி, தன் கையை ஓங்கி, கன்மலையை, தன் கோலினால் இரண்டு தரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது.    கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி; இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக நீங்கள் என்னை பரிசுத்தம் பண்ணும்படி, விசுவாசியாமற்ப்போனபடியால், இந்த சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் நீங்கள் அவர்களை கொண்டு போவதில்லை என்றார்.  இங்கே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம் பண்ணினதினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் எனப்பட்டது.  

பிரியமானவர்களே மேற்க்கூறபட்டிருக்கிற கருத்துக்கள் என்னவென்றால் அங்கு காணப்பட்ட அந்த மகிமை தான் கன்மலை,  கன்மலை என்பது தான் கிறிஸ்து.   கர்த்தர் மோசே ஆரோன் என்பவர்களிடத்தில் கன்மலையை பார்த்து பேச சொல்லுங்கள் என்று கர்த்தர் சொன்னது; இவர்கள் பேசினால் கன்மலையாகிய கிறிஸ்துவும் பேசுவார் என்பதும், அவர் பேசினால், இஸ்ரவேல் புத்திரருக்கு ஆறுதலும், சமாதானமும். சந்தோஷமும், உண்டாயிருக்கும் படி அவருடைய உள்ளத்திலிருந்து ஜீவ தண்ணீராகிய (வசனம்) ஊற்று புறப்பட்டு வரும். அதனை ஜனங்கள் குடித்து அவர்கள் ஆத்துமா இளைப்பாறுதலை அடைந்திருக்கக்கூடும் என்பதற்காகவே கர்த்தர் மோசே, ஆரோன் என்பவர்களிடம் அவ்விதம் கன்மலையை பார்த்து பேசும் படி சொல்கிறதைப் பார்க்கிறோம்.  

ஆனால் இரண்டு தடவை அவன் கன்மலையை அடித்தான், அவன் தன் மனம் பதறி பேசினான் என்று சங்கீதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.  அவ்விதம் கன்மலையை அடித்த போதும் சபையாரும் மிருகங்களும் குடித்தது என்று வாசிக்கிறோம்.  ஆனால் கன்மலையாகிய கிறிஸ்து ஒரேதரம் தான் அடிக்கப்படவேண்டும்.  இரண்டாம் தரம் நாம் அவரை பாவம் செய்து அடிக்கக்கூடாது என்பதும், அவ்விதம் செய்தால் நம்முடைய வாழ்க்கை மேரிபா என்னப்படுகிறது.  என்னவென்றால் நம்மை கர்த்தர் அவருடைய வசனத்தால் பரிசுத்தப்படுத்தினால், அவரிடத்தில் நாம் வாக்குவாதம் பண்ணினாலும் அந்த வாழ்க்கை மேரிபா என்னப்படுகிறது.  ஆதலால் வாக்குவாதமும், பரிசுத்தமும் ஒரே உள்ளத்தில் செயல்பட்டால் அதனை கர்த்தர் மேரிபா என்கிறார்.   அப்படிப்பட்டவர்கள் கானானில் பிரவேசிக்கமுடியாது.  

ஆதலால் பிரியமானவர்களே நாம் ஜாக்கிரதையாக நம் உள்ளத்தை பாதுகாத்துக்கொண்டு, கானானுக்குள் பிரவேசிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.