தீர்க்கதரிசனம் சொல்லுதல் 2

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 21, 2020


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

            ஆதலால் தீர்க்கதரிசனங்களை மிகவும் பகுத்தறிய வேண்டும். எல்லா தீர்க்கதரிசனங்களையும் அற்பமாய் எண்ணக்கூடாது. தேவன் நம்மிடத்தில் பேசுகிற தீர்க்கதரிசனம் உண்டு.

நீதிமொழிகள் 29:18

தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள் வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான். தீர்க்கதரிசனம் சொல்லாமல் இருந்தாலும், தீர்க்கதரிசனம் கேட்டு கீழ்படியாமல் இருந்தாலும் தேவன் நம்மை தண்டிக்கிறார்.

ஆமோஸ் 2:11-16

உங்கள் குமாரரில் சிலரை தீர்க்கதரிசிகளாகவும், உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப் பண்ணினேன் இஸ்ரவேல் புத்திரரே, இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர்  கேட்கிறார்.

 

நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.

 

இதோ, கோதுமைக்கட்டுகள் நிறைபாரமாக ஏற்றப்பட்ட வண்டியில் இருத்துகிறதுபோல, நான் உங்களை நீங்கள் இருக்கிற ஸ்தலத்தில் இருத்துவேன்.

 

அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பராக்கிரமசாலி தன் பிராணனைத் தப்புவிப்பதுமில்லை.

 

வில்லைப் பிடிக்கிறவன் நிற்பதுமில்லை; வேகமானவன் தன் கால்களால் தப்பிப்போவதுமில்லை; குதிரையின்மேல் ஏறுகிறவன் தன் பிராணனை இரட்சிப்பதுமில்லை.

 

பலசாலிகளுக்குள்ளே தைரியவான், அந்நாளிலே நிர்வாணியாய் ஓடிப்போவான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

 

            அநேகபேர்  தேவனுடைய வார்த்தையை தீர்க்கதரிசனமாக சொல்வதற்கு விடாமல் மக்களை நிந்தித்து, பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக பேசி தடைசெய்து விடுவார்கள்.

அப்படிப்பட்டவர்களை தேவன், ஆமோஸ் 2:11-16-லுள்ள தேவனுடைய வார்த்தையினால் தேவன் நம்மை தண்டிக்கிறார்.

 

2பேதுரு 2:1-9

கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள். அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள் அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களை கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்கு தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர்  பின்பற்றுவார்கள் அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.

பொருளாசையுடையவர் களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள் பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.

பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;

பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி;

சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப் போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளை திருஷ்டாந்தமாக வைத்து;

 

அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு;

நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர்  இரட்சித்திருக்க;

கர்த்தர்  தேவபக்தியுள்ளவர் களைச் சோதனையின்றி இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயதீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.

பிரியமானவர்களே,

நீங்கள் முன் குறித்த தேவ வசனத்தை நன்றாக படித்து, அதை ஆழத்தில் தியானித்து கள்ளத்தீர்க்கதரிசிகள் யார்? என்று அறிந்து, நாம் சத்தியவார்த்தைகளை தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொண்டு, அனுதினம் நம்மை காத்துக்கொள்வோமானால் தேவன் நம்மை தீமையினின்று விடுதலையாக்கி நம்மை அனுதினம் இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்.

மேலும் உபாகமம் 13:1-4,

உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி:

நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும்,

அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழுஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர்  உங்களைச் சோதிக்கிறார்.

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர்  கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர்  சத்ததைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.

மேலும் கர்த்தர்  சொல்லுகிறார், ஏசாயா 29:8-12

அது, பசியாயிருக்கிறவன் தான் புசிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் விடாய்த்து தவனத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமக யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும் இருக்கும்.

 

தரித்துநின்று திகையுங்கள் பிரமித்துக் கூப்பிடுங்கள் வெறித்திருக்கிறார்கள், திராட்சரசத்தினால் அல்ல் தள்ளாடுகிறார்கள், மதுபானத்தினால் அல்ல.

 

கர்த்தர்  உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடு போட்டார்.

 

ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப் போலிருக்கும் வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன்: இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான்.

அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புஸ்தகத்தைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன்: எனக்கு வாசிக்க தெரியாது என்பான்.

இவ்விதமாய் மேற்கூறப்பட்ட வசனங்கள் சம்பவிப்பது யாருக்கு என்றால்,

ஏசாயா 29:13

இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள் அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

 

மேலும் 2 பேதுரு 1:20,21

வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.

தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்தஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

 

ஆதலால் பிரியமானவர்களே,

தீர்க்கதரிசனத்தை ஒருபோதும் அற்பமாய் எண்ணப்படக்கூடாது, எவ்விதமான தீர்க்கதரிசனங்கள் எல்லாம் உண்டு என வேத புஸ்தகத்தில் வாசிக்கிறோம்.

அதனால் தீர்க்கதரிசனங்கள் நாம் கேட்கும் போதும் பேசும் போதும் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு பேசுகிற வார்த்தைகளா? என்பதை நாம் பகுத்தறிந்து அதன்படி நடக்க தேவன் கிருபை செய்வாராக


ஆனபடியால் தீர்தரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.


பொல்லாங்காய் தோன்றுகிற  எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.


எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதை பிடித்துக் கொள்ளுங்கள்.

            கர்த்தர் தாமே இவ்வார்த்தைகளால் ஆசீர்வதிப்பாராக. நாம் அனுதினம் தேவனுடைய வசனத்தினாலும், ஜெபத்தினாலும், கிருபையினாலும், தேவ வல்லமையினாலும் பரிசுத்தப்படுவோம்.

தேவன் தாமே யாவரையும் ஆசீர்வதித்து, சமாதானம் யாவருக்கும் தந்தருள்வாராக. ஆமென்.

 

அல்லேலூயா.

 

-தொடர்ச்சி நாளை