கிறிஸ்துவின் சரீரமாகிய சபை திடப்படுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 10, 2020


2. திடனற்றவர்களை தேற்றுதல்:

            நாம் திடனாக இருந்தால் மட்டுமே திடனற்றவர்களை தேற்ற முடியும். நாம் பரிசுத்தம் பெற்று வளர வேண்டுமானால், நாம் முதலில் திடமனதாக இருக்கவேண்டும். எந்த சூழ்நிலைகள் வந்தாலும் நாம் கிறிஸ்துவோடுகூட எடுத்த உடன்படிக்கையில் நாம் தவறாமல் காத்துக்கொள்ள வேண்டும்.

            ஆனால் நம்மில் சிலபேர் எடுத்த உடன்படிக்கையில் தவறிவிடுகிறோம். நாம் மாயையான காரியங்களால் விழுந்து விடுகிறோம். சில உலக இன்பங்களுக்காக உடன்படிக்கையை முறித்து விடுகிறோம். இது அக்கிரமம் என்று உணராதவர்களாக போய்விடுகிறோம். அக்கிரமத்தில் மரித்த நாம் மீண்டும் அக்கிரமத்தில் விழுந்து விடுகிறோம். அதனால் இவ்வித உலக இன்பங்களை உள்ளத்தில் வைத்து விட்டு தேவனுடைய வசனத்தை மற்றவர்களுக்கு கொடுத்தால்,

சங்கீதம் 69:20-28

நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன் எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்கு காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்.

என் ஆகாரத்தில் கசப்புக் கலந்துக் கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்க கொடுத்தார்கள்.

அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கடவது.

அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப்பண்ணும்.

உம்முடைய உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றும் உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.

அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.

தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.

அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக.

ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர்  எழுதப்படாதிருப்பதாக.

 

இவ்விதமாக, நாம் நிர்விசாரமாக அக்கிரமத்தை செய்கிறோம். தேவன் அக்கிரமத்தின் மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்துவது மட்டுமல்லாமல் அக்கிரமம் என்றே நமக்கு தெரியாமலே நாம் அக்கிரமம் செய்கிறோம். அதற்கு காரணம் நம்முடைய ஆவிக்குரிய கண்கள் அடைக்கப்படடிருக்கிறது.

            அதனால் நம்முடைய கண்கள் இந்த நாளிலாகிலும் திறப்பதற்காக நாம் ஜெபிப்போம், சத்திய வசனத்திற்கு கீழ்படிவோம் அப்போது அக்கிரமம் என்ன என்று நமக்கு தெரியவரும்.

            அக்கிரம செய்கைகாரரே, என்னை விட்டு அகன்றுபோங்கள் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொல்லுகிறதை பார்க்கிறோம்.

அதனால் தான் கிறிஸ்துவுக்கேற்ற நல்ல கனிகளை (நற்கிரியை) செய்யாவிட்டால் மத்தேயு 7:19 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.

அதனால் தான், மத்தேயு 7:21-ல் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்ததின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

இப்போதாவது, நாம் எல்லாரும் ஒன்றுகூட சிந்திப்போம். நாம் எப்படி கிறிஸ்துவோடுக்கூட ஐக்கியப்பட்டு, நாம் பரிசுத்தத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

யோவான் 15:1-3

நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர் .

என்னில் கனிகொடாதிருக்க கொடி எதுவோ அதை அவர்  அறுத்துப் போடுகிறார் கனிக்  கொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.

நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, நாம் ஒவ்வொரு நாளிலும் தேவ வசனத்தினால் நம்மை சுத்தம் செய்வோமானால், நாம் மீண்டும் பாவம், அக்கிரமத்தில் விழுந்து கெட்டு போகாதபடி பாதுகாக்க நிச்சயம் தேவன் நமக்கு கிருபை செய்வார்.

இவ்விதமாக, தேவ வசனத்தினால் நம்மைக் காத்துக்கொண்டால் மாத்திரமே நம்  இருதயம் திடனோடு இருக்கும்.

சங்கீதம் 31:24

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர்  உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்தால் நாம் ஒருபோதும் திடனற்று போகமாட்டோம். அவர்  திட அஸ்திபாரமுள்ள மூலைக் கல்லாயிருக்கிறார். கழிந்த நாட்களிலே  வாசித்திருப்பீர்கள். மூலைக் கல்லாகிய இயேசு கிறிஸ்துவினோடுகூட சேர்த்து நம்மையும் தேவன் தேவாலயமாக கட்டுகிறார்.

ஏசாயா 28:16

ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர்  உரைக்கிறதாவது: இதோ அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன் அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான்.

அதை தான், லூக்கா 6:47,48 –ல் என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன்.

ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின் மேல் அஸ்திபாரம் போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக் கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கண்மலையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. (திட அஸ்திபாரம்).

நாம் எப்படி கிறிஸ்துவோடு அஸ்திபாரம்போடப்பட வேண்டும், என்று இந்த வசனம், நாம் நன்றாக தியானித்து, தேவனுடைய வார்த்தை பிரகாரம் நடந்து கொள்வோமானால், எவ்விதமான போராட்டங்கள் வந்தாலும் நாம் அசைக்கப்படுவதில்லை.

லூக்கா 6:49

என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான் நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். (இவர்கள் தான் திடனற்றவர்கள்)

 

இப்படிப்பட்டவர்களை நாம் திடப்படுத்தி தேற்றவேண்டுமானால் நாம் திடனுள்ளவர் களாயிருக்க வேண்டும். இவ்விதமாக திடனற்றவர்களை நாம் தேவ வசனத்தில் திடப்படுத்தி தேற்றும்போது தேவ வசனம் நன்மையும் பரிசுத்தப்படுத்தும்.

லூக்கா 6:39

பின்னும் அவர்  ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: குருடனுக்குக் குருடன் வழிக்காட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?

அதை தான் ஏசாயா 42:18,19 செவிடரே, கேளுங்கள் குருடரே, நீங்கள் காணும்படி நோக்கிப் பாருங்கள்.

என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனேயல்லாமல் அந்தகன் யார்?

கர்த்தருக்கு பயப்படுகிறவனுக்கு திட நம்பிக்கை உண்டு. அவன் பிள்ளைகளுக்கும்  சமாதானம் கிடைக்கும்.

நீதிமொழிகள் 14:27

கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

சங்கீதம் 128:1-6 எவ்விதத்தில் இருக்கும் என்பதை இந்த சங்கீதம் நமக்கு காட்டுகிறது.

            ஆகையால் பிரியமானவர்களே, இதை வாசிக்கிற தேவ ஜனமே, முதலில் நாம் நம்முடைய குறைகளை தேவ சமூகத்தில் அறிக்கை செய்து ஒப்புக்கொடுப்போம்.

காரணம் சங்கீதம் 80:8-17 வரையும்,

நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர்.

அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர் அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.

அதின் நிழலால் மலைகளும், அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது.

அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.

இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?

காட்டுப்பன்றி அதை உழுது போடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.

சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சைச்செடியை விசாரித்தருளும்.

உம்முடைய வலதுகரம் நாட்டின கொடியையும், உமக்கு நீர் திடபடுத்தின கிளையையும் கடாட்சித்தருளும்.

அது அக்கினியால் சுடப்பட்டும் வெட்டுண்டும் போயிற்று; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்து போகிறார்கள்.

உமது கரம் உமது வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனுஷகுமாரன் மீதிலும் இருப்பதாக.

இவ்விதமாக ஜெபிக்கும் போது திடனற்று, பின்வாங்கினவர்களை கர்த்தர்  திரும்பவும் உயிர்ப்பித்து திடப்படுத்தி நம்மை மீண்டும் இரட்சிக்கிறார்.

நாம் ஜெபிப்போம்.

 

 

-தொடர்ச்சி நாளை.