Apr 09, 2020

நாம்  பரிசுத்த அலங்காரத்தோடே  கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்படியாக  நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு அநேக ஒழுங்குகளை தம்முடைய வார்த்தையாகிய நியாயப் பிரமாணத்தின் மூலமாகவும் ஒரேபேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்து மூலமாகவும் தாம் தெரிந்து கொண்ட தீர்க்கத்தரிசிகள் மூலமாகவும், தம்மால்  தெரிந்துக் கொண்ட அப்போஸ்தலர்   மூலமாகவும் அன்பாகவும் கடிந்து கொண்டும்,   எச்சரிப்போடும் நம்மோடு பேசுகிறார் என்பது நம்மளில் அநேக பேர்  குறிப்பாக எல்லோருக்கும் தெரிந்த காரியம் தான்.

ஆனால், நாமோ தேவன் நமக்கு தந்திருக்கிற  ஒழுங்குகளை விட்டுவிட்டு மனுஷர்கள் போடுகிற கட்டளைகளுக்கும் கற்பனைக்கும் பயந்து மனுஷர்களை பிரிய படுத்தியும், தேவனை வருத்தப் படுத்தின நேரங்களை இந்த நாட்களில் ஒன்று சந்திப்போமா. சற்று நேரம்  சிந்தியுங்கள் தேவனிடத்தில் ஒப்புரவாகுவோம்.

அதை தான்,

நீதிமொழிகள் 29:25

மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்: கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.

 

1 யோவான் 1:4

உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.

 

நீதிமொழிகள் 28:25

பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.

 

பெருநெஞ்சன் யார்?


தேவனுடைய வார்த்தைகளை கேட்டுகேட்டு, தேவனுக்கு பயப்படாமலும், கீழ்ப்படியாமலும், தேவன் சொன்ன வார்த்தைகளுக்கு மாறாக நடக்கிறவன் தான் பெருநெஞ்சன்.

 

எரேமியா 17:7, 8

 கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

 

அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத்தன்வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.

இதுவரை நாம் நடந்தது போதும் இப்போதாவது மனுஷர் மேல் உள்ள நம்பிக்கைகளை எல்லாம் விட்டு விட்டு கிறிஸ்துவோடு கூட ஐக்கியப் படுவோம்.

எரேமியா 17:5

மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

 

 

 

 

எரேமியா 17:13

இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள், அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.

 

யாருடைய பெயர் புழுதியில் எழுதப்படுகிறது?

எரேமியா 17:11

 அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சுபொரிக்காமற்போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான், அவன் தன் பாதி வயதிலே அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாயிருப்பான்.

அநேகர் இந்த நாட்களில் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள்கொடுக்கிறார்கள் அது சரிதான் ஏனென்றால் ஞானஸ்நானம் என்பது நம்முடைய பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனை அனுப்பி நமக்கு காட்டிய  ஒரு மாதிரி தான் அதனால் நம்மளில் அநேகர் ஞானஸ்நானம் எடுக்கிறோம். ஞானஸ்நானத்தை பற்றிய விளக்கங்கள்   முன் நாட்களில் நாம் கேட்டோம்,  இப்போதும் தியானிக்கிறோம்.  ஆனால் நாம் எப்படி ஞானஸ்நானம் எடுக்கிறோம்  என்று சிந்திப்போம்.

கோதுமை மணி நிலத்தில் விழுந்து செத்தாலொழிய பலனைக் கொடுக்காது. இன்று எத்தனை பேர் இந்த பலனை பெற்றிருக்கிறோம். நாம் நினைக்கிறோம் நான் சரியாகத்தான் இருக்கிறேன் என்னிடத்தில் எந்த குறையும் இல்லை,  என் பெயர் ஜீவ புஸ்தகத்தில் இருக்கிறது என்று நினைக்கிறோம்,  நம்புகிறோம்,  துதிக்கிறோம் ஆனால் அநேகர்  தாங்கள் தேவனை விட்டு தூரமாய் அகன்று போனதை  நினைக்காமல் தங்கள் வாழ்க்கையில் வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஞானஸ்நானம் நாம் பெற்றுக்கொள்ளும் போது சத்தியத்தைக்  கேட்டு சத்தியத்தின் படி நடந்து, அதன்படி நடப்போம் என்ற உறுதியோடு நாம் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

 ஞானஸ்நானம் என்பது கிறிஸ்துவாகிய மூலை கல்லோடு நாமும் (நம்மையும்) சேர்த்து நம்மை தேவனுடைய ஆலயமாக கட்டுவதற்கு அஸ்திபாரம் போடுவது தான் ஞானஸ்நானம்.

1 கொரிந்தியர் 3:12, 13

ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,

 

அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியிdpலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.

 (அக்கினி- தேவனுடைய வார்த்தை )

நாம் ஜீவ புஸ்தகத்தில் பெயர் இருக்கிறது என்று நினைப்போம். ஆனால், நம்முடைய பெயர் புழுதியில் இல்லாதபடி இந்த நாளிலாகிலும் தேவனுடைய சத்தியத்தை வாசித்து தியானிக்கிற  நீங்கள் உணர்வடைந்து சீர்திருந்துங்கள்.    

1 பேதுரு 1:17-19

அன்றியும்,  பட்சபாதமில்லால் அவனவனுடைய கிரியgயின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.

 

உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,

 

குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.

 

கர்த்தருக்குள் பிரியமானவர்களே,

யாத்திராகமம் 33:5-9

ஏனென்றால், நீங்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள், நான் ஒரு நிமிஷத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை நிர்மூலம்பண்ணுவேன். ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள். அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவே ன் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தார்.

 

ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் ஓரேப் மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.

 

மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.

மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது. கர்த்தர் மோசேயோடே பேசினார்.

நீங்கள் ஒன்று  சிந்திக்கவேண்டும். கர்த்தர் யாரிடத்தில் வாசம் பண்ணுகிறார் என்று தெரிய வர வேண்டும் நம்முடைய இஷ்டம் போல் நடந்தால் தேவன் நம்மிடத்தில் வசிப்பதில்லை அநேகம் பேர் பொய் போதகம் தருவார்கள், தந்து ஜனங்களை  தங்கள் வசமாக்கிக் கொண்டு தேவனுடைய நியாயத்தீர்ப்பில்  மிகவும் வேதனை அனுபவிப்பார்கள். கிறிஸ்துவுக்குள் எனக்கன்பானவர்களே இவ்விதமான தவறுகள் ஒழுங்கில்லாமை  வருவதற்கு காரணம் நம்முடைய ஜெபக்குறைவுவசன தியானக் குறைவுஉணர்ந்து ஜெபித்து உணர்வடையுங்கள்.

அதைத்தான்,

நீதிமொழிகள் 31:10, 11

குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.

அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்: அவன் சம்பத்துக் குறையாது.

பிரியமானவர்களேதேவனுடைய சத்திய சபையை நாம் கண்டுபிடித்து அதன் பரலோக அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதை தான் மேற்கூறிய வசனத்தில் குறிக்கப்பட்டிருக்கிறதே தவிர இது உலக விவாகத்தை பற்றியதல்ல என்பதை நாம் அறியவேண்டும் சத்திய சபையில் தான்  தேவனுடைய சத்தியம் பேசப்படும் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

                Nநகபேர் சத்தியம் என்ன என்றே தெரியாதபடி தாங்கள் தேவனுடைய சத்திய சபை என்று சொல்லி வருகிறார்கள் நாம் உண்மையான பிள்ளைகளாகசத்தியத்தின் படி நாம் நடப்போமானால் நாமே அவருடைய சம்பத்து நம்முடைய மனவாளன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, சத்தியத்தின்படி நடப்போமானால் நம்மை சகல சத்தியத்தின் பாதையிலும் நடத்துவார்.

மல்கியா 3:17

என் சம்பத்தைச் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ் செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்.

நம்மளில் அநேகர் நியாயப்பிரமாணத்தை தள்ளிவிடுகிறோம்

மத்தேயு 5:17-18

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்,அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

 

வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நம்முடைய வாழ்க்கையில் நியாய பிரமாணம் மிக முக்கியமானது.

ரோமர் 7:7                 

ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை, இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.

 

நியாயப்பிரமாணம் நம்முடைய பாவத்தை போதிக்கிறது.

ரோமர் 7:12

ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.

 

ரோமர் 7:14

மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாகவிற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன்.

அநேக நேரங்களில் பாவம் செய்யக் கூடாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், நம்மை நினைக்காமலே செய்கிறோம்.

அதனால், ரோமர் 7:15-17

எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை, நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.

 

இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே.

 

ஆதலால் நான் அல்ல எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.

 

ஆதலால், நீங்கள் யாவரும் சிந்திக்க வேண்டும் இதன் கருத்துக்கள் உள்ளான மனுஷன் வளருவதற்கும் அதின் பரிசுத்தத்திற்கும் மிகவும் பிரயோஜனமாயிருக்கும்.

 

ரோமர் 7:21-22

ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்.

 

உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன்.

1 யோவான் 3:4

பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.

 

1 யோவான் 3:5

அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள். அவரிடத்தில் பாவமில்லை.

 

நம்முடைய உள்ளத்தில் இருக்கிற பாவங்களை சுமந்து தீர்க்க உள்ளத்தில் வெளிப்பட்டார் என்பதை நாம் யாவரும் அறிய வேண்டும்.

ஆதலால், 1 யோவான் 3:7 , பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள். நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.

 

ஆனபடியால், 1 யோவான் 1:6

நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்.

 

1யோவான் 1:7-10

அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

 

( ஆதலால் பிரியமானவர்களே தேவனுடைய வார்த்தை நாம் ஏற்றுக் கொள்ளும்போது தான் ஜீவ வார்த்தையாக நமக்குள் அது வருகிறது. அந்த ஜீவ வார்த்தையிலிருந்து ஜீவனாம் கிறிஸ்து வெளிப்படுகிறார். )

நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம். அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

                ஆதலால், பிரியமானவர்களே! இந்த நாட்களில் நம்முடைய பரிசுத்தம் எப்படியிருக்கிறது என்பதை நம்மை நாமே சோதித்து நம்மளில் வந்து போன குறைகளை தேவனிடத்தில் அறிக்கையிட்டுஇனி  எப்படி சத்தியத்தில் வளர  வேண்டும், சத்தியம் எப்படி நமக்குள் இருக்க வேண்டும் என்று எல்லாரும் அவரவர் சிந்தித்து இந்த நாட்களில் நம்மிடத்திலும்தேசத்திலும் இருக்கிற  தேவ கோபம் மாறும்படியாக நாம் யாவரும் பரிசுத்த அலங்காரத்தோடே தேவனை  ஆராதிப்போம்யாவரும்  ஜெபிப்போம்.

 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

 

-தொடர்ச்சி நாளை.