ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 08, 2020

 

நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம், முழுமையும் முற்றிலும் பரிசுத்தமாக காக்குதல் எப்படி?

1தெசலோனிக்கேயர்  5:14-22

மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறது என்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.

ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பாருங்கள் உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள்.

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள் அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

ஆவியை அவித்துப் போடாதிருங்கள்.

தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.

எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.

1.ஒழுங்கு முறைகள்

1கொரிந்தியர்  15:33-36

மோசம்போகாதிருங்கள் ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.

நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள் சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.

ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,

புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.

 

            நாம் கிறிஸ்துவோடு மரித்து பாவ, மோக, இச்சை, உலக இன்பம், உலக ஆசை, பாரம்பரியம்(பழைய வாழ்க்கை), அக்கிரமம் யாவையும் சிலுவையில் அறைந்து யாவற்றிற்கும் செத்து அடக்கம் பண்ணப்பட்டு ஒரு புதிய சரீரமாக நாம் கிறிஸ்துவோடு எழுந்திருக்கிறோம் என்பதை நாம் நன்றாக உணர்ந்து அதன்படி நம்முடைய அனுதின ஜீவிதத்தில் நாம் வெளிப்பட வேண்டும்.

அதனால் தான் யோவான் 12:24-ல் மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.

பிரியமானவர்களே!

அதனால் தான் யோவான் 12:25 –ஆம் வசனத்தில் “தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான் இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்”.

இவ்விதமாக காத்துக்கொள்ள வேண்டுமானால் நீதிமொழிகள் 2:1-7-ன் படி,

என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும் பொருட்டு,

நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,

ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,

அதை வெள்ளியைப் போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,

அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.

கர்த்தர்  ஞானத்தைத் தருகிறார் அவர்  வாயினின்று அறிவும் புத்தியும் வரும்

அவர்  நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார் உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர்  கேடகமாயிருக்கிறார்.

அதைதான் வெளி 22:17-ல் ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள் கேட்கிறவனும் வா என்பானாக தாகமாயிருக்கிறவன் வரக்கடவன் விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.

 

பிரியமானவர்களே!

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொல்லுகிறார் வெளி 22:18,19 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.

ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.

 தேவனைப் பற்றி அறியும் அறிவை நாம் பெற்றுக்கொள்ளாததினால் பலர்  தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்து நம்முடைய நல்லொழுக்கங்களிலிருந்து தவறிவிடுகிறோம்.

அதனால் ஏசாயா 29:13-ல் இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள் அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

கொலோசெயர்2:20-23

நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,

மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே, என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன?

இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.

இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர் கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.

கொலோசெயர் 2:19

மாயமான தாழ்மையிலும் (தாழ்மைபடுகிறேன் என்று வெறும் வாயினால் சொல்வது), தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.

இவ்விதமாக, நாம் நல்லொழுக்கமுள்ளவர் களாக காணப்படவேண்டும்.

நீதிமொழிகள் 11:16

நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள் பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள்.

யாருடைய மானம் குலைக்கபடுகிறது?

ஏசாயா 3:16,17

பின்னும் கர்த்தர் சொல்லுகிறதாவது: சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் மருட்டிப் பார்த்து, ஒய்யாரமாய் நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.

ஆதலால் ஆண்டவர் சீயோன் குமாரத்திகளின் உச்சந்தலையை மொட்டையாக்குவார் கர்த்தர் அவர்கள் மானத்தைக் குலைப்பார். (எல்லா மேன்மையையும் தேவன் எடுத்து மாற்றுகிறதை எழுதப்பட்டிருக்கிறது).

செப்பனியா 1:4-6

நான் யூதாவின் மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,

வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும்,

கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத் தேடாமலும், அவரைக் குறித்து விசாரியாமலுமிருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.

தேவ ஜனமே, கர்த்தருக்குள் பிரியமானவர்களே, நாம் செய்த தப்பிதங்கள் இப்பொழுது நிச்சயம் நம்முடைய உள்ளத்தில் எழும்பும். நம்மளில் எத்தனை பேர்  தேவனோடே இணைக்கப்பட்டவர்கள் மற்ற புறஜாதிகள் செய்ததுபோல் கண்களின் இச்சைக்காகவும்,மாம்ச இச்சைக்காகவும் ஜீவனத்தின் பெருமையினால் இந்த தவறுகளை தேவனுக்கு விரோதமாக செய்தோம். ஒரு நிமிஷம் சிந்தித்துக் கொள்ளுங்கள். உணர்வடைந்து அறிக்கை செய்து ஆண்டவரிடத்தில் நாம் மன்றாடுவோம். கர்த்தர்  நம் தப்பிதங்களை மன்னிப்பார்.

அன்பானவர்களே, செப்பனியா 1:7-11 வரை தியானித்து படியுங்கள். படித்தவர்கள் ஆம் (yes) என்று மாத்திரம் அறிவியுங்கள்.

செப்பனியா 1:12

அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர்  நன்மை செய்வதும் இல்லை தீமை செய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர் களுமான மனுஷரைத் தண்டிப்பேன்.

விளக்கு என்பது தேவனுடைய கட்டளைகளும், தேவ வசனத்தாலும், தேவ கற்பனைகளாலும் நாம் கிறிஸ்துவின் ஜீவனாக இருக்கிறோமே என்று தேவன் இந்நாட்களில் மிகவும் சோதிக்கிறார்.

நம்மை நாமே இந்தவேளை சோதித்து பார்போம்.

செப்பனியா 1:13

அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும் அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள் அவர்கள் திராட்சைத்தோட்டங்களை நாட்டியும் அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.

இந்த வசனத்தை நாம் சற்று சிந்தித்து பார்ப்போம்.

செப்பனியா 2:13-14

அவர்  தமது கையை வடதேசத்துக்கு விரோதமாய் நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார்.

அதின் நடுவில் மந்தைகளும் ஜாதி ஜாதியான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும் அதினுடைய சிகரங்களின்மேல் நாரையும் கோட்டானும் இராத்தங்கும்; பலகணிகள் கூவுகிற சத்தம் பிறக்கும் வாசற்படிகளில் பாழ்க்கடிப்பு இருக்கும் கேதுருமரங்களின் மச்சைத் திறப்பாக்கிப்போடுவார்

இவையெல்லாம், இப்போது பெரிய நகரங்களில் சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்று அறிகிறோம் பார்க்கிறோம்.

இவையெல்லாம் யாருக்கு எங்கு சம்பவிக்கிறது என்றால்,

செப்பனியா 2:15

நான்தான், என்னைத்தவிர வேறொருவரும் இல்லை என்று தன் இருதயத்திலே சொல்லி, நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப்போய்விட்டதே! அதின் வழியாய்ப்போகிறவன் எவனும் ஈசல் போட்டுத் தன் கையைக் கொட்டுவான்.

நாம் தேவனுடைய வார்த்தையைக் கேட்டும் நிர்விசாரமாய் நடந்த நேரத்தை நாம் யாவரும் ஒருமனதோடு தேவனிடத்தில் ஒப்பக்கொடுத்து ஜெபிப்போம்.

 

            நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுமையும் கறைதிரையில்லாதபடி நம்மை காத்துக்கொள்ள,

1கொரிந்தியர்  3:18-20

ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.

இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்தினிலே பிடிக்கிறாறென்றும்,

ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர்  அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.

                        உலக ஞானத்தினால் நாம் வஞ்சிக்கப்பட்டு போகாதபடி நம்மை காத்துக்கொள்வதில் மிகவும் ஜாக்ககிரதையாக இருப்போம். ஒப்புக் கொடுப்போம், ஜெபிப்போம்.

தேவன் தாமே யாவரையும் ஆசீர்வதிப்பாராக!

 

-தொடர்ச்சி நாளை.